உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஏமாற்றி விட்டதாக அருந்ததிய அமைப்பு கொந்தளிப்பு

தி.மு.க., ஏமாற்றி விட்டதாக அருந்ததிய அமைப்பு கொந்தளிப்பு

சென்னை: ''அருந்ததியர் சமுதாயத்திற்கு 6 சதவீதம் உள் ஒதுக்கீடு தேவை,'' என, ஆதி தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.அருந்ததியர் சமுதாய மக்கள் சார்பில், ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன், தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகா சபை தலைவர் உக்கடம் நாகேந்திரன், தேசிய ஒண்டிவீரன் பேரவை நிறுவனத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று பழனிசாமியை சந்தித்தனர்.அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு வழக்கில் சிறப்பு குழு அமைத்து, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, 10 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வெற்றி பெற வைத்ததற்காக, பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.ஆதி தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன் கூறியதாவது: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை பெற்று தந்து, இந்த சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளித்த பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தோம். தி.மு.க., ஆட்சியில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட சமுதாயமாக அருந்ததியர் சமுதாயம் இருந்தது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்டு, 16 லட்சம் பேர் இருப்பதாகக் கூறி, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு என, எங்களை ஏமாற்றி விட்டார். அன்றிலிருந்து இதை எதிர்த்து வருகிறோம். எங்களுக்கு தேவை 6 சதவீதம் உள் ஒதுக்கீடு. அ.தி.மு.க., ஆட்சி அமையும்போது, எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என, பழனிசாமி தெரிவித்தார்.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அவர்களுக்கு தோதான அமைப்பை அழைத்து, தனக்குத் தானே முதல்வர் பாராட்டை தேடிக் கொண்டார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு பெற்று தந்தது பழனிசாமி. அதில் ஸ்டாலின் 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொள்ள பார்க்கிறார். உள் ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, ஜெயலலிதாவும் கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 07, 2024 23:48

எல்லாம் அந்த 40 பேர் பார்த்துக்குவாங்க


Ramesh Sargam
ஆக 07, 2024 21:55

திமுக யாரைத்தான் ஏமாற்றவில்லை. தேர்தலுக்கு முன்பு பூரண மதுவிலக்கு என்று பொய் கூறி ஆட்சியில் அமர்ந்தார்கள். மதுவிலக்கு அமுல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றினார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறினார்கள். இன்றுவரை ஒழித்தபாடில்லை. ஒழிக்கவும் முடியாது. மீண்டும் மாணவர்களை ஏமாற்றினார்கள். இப்படி எல்லா விஷயத்திலும் மக்களுக்கு ஏமாற்றம்தான்.


Raman
ஆக 07, 2024 05:39

இப்ப கொந்தளிப்பு. எல்லாம் இருக்கும் ஓட்டு போரும் போது ஒன்றும் இருக்காது


vijai
ஆக 07, 2024 17:54

ஓட்டு போடும் போது 200 ரூபாய் பிரியாணி பண்ணலாம் குவாட்டர் வாங்கிட்டு ஓட்டு போட்டு விடுவாங்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை