உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போதை பொருள் விற்பனை அமோகம்; பள்ளி மாணவர்கள் அடிமையாகும் அவலம்

போதை பொருள் விற்பனை அமோகம்; பள்ளி மாணவர்கள் அடிமையாகும் அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்தவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டு

ஆனால் இன்று வரை போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் முதல் பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவர்கள் இவ்வகை போதைப்பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பள்ளி அருகே மற்றும் சாலையோர வணிக நிறுவனங்களில் போதைப்பாக்குகள் விற்பனையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இன்றைய சூழலில் பெண் குழந்தைகளும் அடிமையாவது என்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருந்தகங்களில் நிகோடின் என்ற சிவிங்கம் மாத்திரை மருத்துவரின் அனுமதிச் சீட்டு இல்லாமல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, மாவட்ட நிர்வாகம் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டூ- - -வீலர் சாகசம்

கும்மிடிப்பூண்டி பகுதியில், சாலை போக்குவரத்து விதிகளை மீறி, 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் டூ - -வீலர் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பள்ளி நேரங்களில், ஏராளமான பள்ளி மாணவர்கள், டூ - -வீலர்களில் பள்ளிக்கு வந்து செல்வதும், பெற்றோரை பின்னால் அமர வைத்து மாணவ - மாணவியர் டூ -- வீலர்களை ஓட்டிச் செல்வதும் அதிக அளவில் காணப்படுகிறது.ஒரு சில பள்ளி மாணவர்கள், ஒரு படி மேலே சென்று, பள்ளி மாணவியர் முன் டூ- - வீலர் சாகசம் செய்வது, போக்குவரத்து விதிமீறல்களின் உச்சமாகும். கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் நடந்தும், சைக்கிள்களிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அந்த சாலையில், அவர்கள் முன் மற்ற பள்ளி மாணவர்கள் டூ- - வீலர்களில் சாகசம் செய்வது மட்டுமின்றி, மாணவியரை மிரள வைக்கும் விதமாக செல்வதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.பள்ளி மாணவர்கள் சாகசம் செய்யும் ரெட்டம்பேடு சாலையில்தான் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம், போக்குவரத்து போலீஸ் நிலையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.கும்மிடிப்பூண்டி பகுதியில் சாலை போக்குவரத்து விதிகள் மீறி டூ- - வீலர்கள் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் பயிலும் பள்ளிக்கு நேரடியாக சென்று, சாலை விதிகள் மீறல்களால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தண்டனைகள் குறித்து விளக்கி கூற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புறநகர் ரயிலில் சில்மிஷம்

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், தினமும், 400க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், பல்லாயிரக்கணக்கானோர், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில், காதலர்கள் என்ற போர்வையில், பயணம் செய்யும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், பகிரங்கமாக சில்மிஷம் செய்து வருகின்றனர். இதை பார்க்கும் பயணியர் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை, பெரும்பாலான ரயில்களில் பயணியர் கூட்டம் குறைவாக இருக்கும். இந்த ரயில்களில், காதல் ஜோடிகள் பயணம் செய்து, பிற பயணியரை முகம் சுளிக்க வைக்கும் அருவருக்கத்தக்க வகையில், சில்மிஷம் செய்து வருகின்றனர்.மேலும், புட்லுார், இந்து கல்லுாரி, ஆவடி, அண்ணனுார், வில்லிவாக்கம், உள்ளிட்ட ஆட்கள் குறைவான ரயில் நிலையங்களிலும், காதல் ஜோடி போர்வையில் குவிந்து வருகின்றனர். எனவே, ரயில்வே போலீசார் ஓடும் ரயில்களிலும், ஆட்கள் குறைவான ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பிற பயணியரை அவதிக்குள்ளாக்கும், காதல் ஜோடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

theruvasagan
பிப் 22, 2024 22:16

அதே போதையை அரசே டாஸ்மாக் சரக்கு மூலமாக தருகிறபோது எதுக்கு மற்ற போதை வஸ்துக்களை உபயோகித்து நாசமா போகணும் என்பதே அரசாள்பவர்களின ஆதங்கம்.


MADHAVAN
பிப் 22, 2024 19:50

குஜராத்து ல துறைமுகத்திலிருந்து தினம் தினம் இந்தியா முழுதும் சப்லய் ஆகுது, அதுக்கு கரணம் யாரு னு எல்லோருக்கும் தெரியும்,


dravidan
பிப் 22, 2024 21:28

ஸ்டிக்கர் ஒட்டியாச்சு. 200 ரூவா வூ ஃபீஸ்


theruvasagan
பிப் 22, 2024 22:02

அப்ப அந்த சரக்கு தமிழ்நாட்டுல நுழையறதுக்கு யார் காரணம் என்பதையும் சொல்லுங்களேன்.


krishna
பிப் 22, 2024 17:12

IDHUDHAAN DRAVIDA MODEL. ENDHA KOMBANAALUM KURAI SOLLA MUDIYAADHA AATCHI IPPADIKKU SARVAADHIKARI


DVRR
பிப் 22, 2024 16:46

மதுவுக்கு அடிமை கஞ்சாவுக்கு அடிமை இளைய சமுதாயம் ???இதற்கு பணம் ???அப்பன் வீட்டு சொத்தா ???


தமிழன்
பிப் 22, 2024 20:07

பஞ்சு மிட்டாய் அரசு தடை செய்து உள்ளது.


S SRINIVASAN
பிப் 22, 2024 16:35

in lot of places kanja sold in villages. no police dare to capture even they are seeing some one selling kanja, DGP WASTE DSP WASTE, INSPECTER WASTE TOTALLY POLICE DEPT WASTE NOT ABLE TO STOP THIS KANJA


karthikeyan.p
பிப் 22, 2024 16:29

இளைய சமுதாயம் எங்கு செல்கிறது


g.s,rajan
பிப் 22, 2024 15:42

மது .கஞ்சா மற்றும் பிற போதை வஸ்துக்களும் நமது நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது ,பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ,வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ,வேலை கிடைக்காமல் சும்மாவே சுற்றிக்கொண்டு இருக்கும் இளைய சமுதாயம் ,மேல் தட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் ,நடுத்தர மக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ,கீழ்த் தட்டு நிலையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் , திரை உலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் ,அரசியல்வாதிகள் ,தொழில் அதிபர்கள் என பாராபட்சம் இல்லாமல் எல்லா தரப்பினரும் பல வித போதைக்கு அடிமையாகியுள்ளனர்.மேலும் தற்போது போதைக்கு அடிமையாகி உள்ள அனைவரையும் மீட்பது என்பது நிச்சயம் மிகப்பெரும் சவால் .....


Muralidharan S
பிப் 22, 2024 15:33

படிக்கும் மாணவர்கள் வாழ்வு பாழானது கருணாநிதி காலத்தில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.. அதாவது இன்றய மாணவர்களின் தாத்தாக்கள் கருணாநிதி'யால்..... மீதியை நீங்களே நிரப்பிக்குங்க...


sankar
பிப் 22, 2024 14:12

அதோடு - எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் - சுகராதாரக்கேடு - இவை சென்னையின் அவலங்கள் - சுகாதாரத்துறை என்று ஒன்று இருக்கிறமாதிரி தெரியவில்லை - இறந்துவிட்டது போல


Ramasamy
பிப் 22, 2024 14:05

Banned cotton candy. and not this .Meaning Cotton candy injurious to health than Ganja Gutka and TAsMAC.


DVRR
பிப் 22, 2024 16:58

The fact not banning alcohol and drug but banning cotton candy 1)Cotton candy very cheap so you cannot make mach money people will die so sales will die slowly, you cannot make much money out of it,invariably business handled by small non political people. 2) Alcohol drug it makes people slaves and they do not die .Very good Business profitability, business done only by political parties,slavery of people and big money market for a long period. These are the basic reasons.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ