உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: கொளுத்தி போடும் மத்திய அமைச்சர்

ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: கொளுத்தி போடும் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், அவரது சகோதரி பிரியங்காவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு புது குண்டை போட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இளம் முகமாக ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அறியப்படுகின்றனர். கேரளாவின் வயநாடு தொகுதியில் சகோதரி பிரியங்காவை நிற்க வைத்து, அவரது வெற்றிக்காக ராகுல் உழைத்தார். அதேபோல், பா.ஜ., தரப்பில் ராகுலுக்கு எதிராக விமர்சனங்கள் எழும்போதெல்லாம், கேடயமாக இருந்து தக்க பதிலடியை பிரியங்கா கொடுத்து வருகிறார்.

ஒற்றுமை

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ராகுல் திடீரென ஜெர்மனி புறப்பட்டுச் சென்றது பேசு பொருளானது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது கூட, 'ஓராண்டில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் வெளிநாட்டுக்கு செல்லக் கூடாதா' என பிரியங்கா பதிலடி கொடுத்தார். அந்த அளவுக்கு இருவரும் அரசியலில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், 'ராகுல் வெளிநாட்டிற்கு சென்றதற்கு காரணமே பிரியங்கா தான்' என, மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு புது குண்டை போட்டுள்ளார்.

ஒப்பீடு

இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுல், பிரியங்காவுக்கு இடையே தற்போது சண்டை எழுந்துள்ளது. லோக்சபாவில் இருவரது உரைகளையும் ஒப்பிட்டு காங்கிரசார் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த, 20 ஆண்டு களாக எம்.பி.,யாக உள்ள ராகுலுக்கு இந்த ஒப்பீடு சிறிதும் பிடிக்கவில்லை. இதனால் , குடும்பத்திற்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தற்போது அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சரான ரவ்நீத் சிங் பிட்டு, கடந்த ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.,வில் இணைந்து தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ShaSha
டிச 23, 2025 06:44

பிஜேபியின் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தீபம் ஏற்றச் சொல்லி நீதிபதியைக் கொண்டு தீர்பளிப்பார்கள் அதன்பிறகு அய்யோ கோர்ட்டை அவமதித்து விட்டார்கள் என்று மறு படியும் கோர்ட்டுக்குச் செல்வார்கள் இதுதான் இவர்களின் சித்தாந்தம்


Anand
டிச 18, 2025 12:28

கார்ட்டூன் சூப்பர்.


Skywalker
டிச 18, 2025 15:40

It's AI


கண்ணன்
டிச 18, 2025 11:49

கான் கிரஸில் இளைஞர் என்றால் ஐம்பது வயதையாவது தாண்டியிருக்க வேண்டும் போல..!


Sivakumar
டிச 18, 2025 17:40

எதை கான் எதை கிராஸ் என்கிறீர்கள் - எல்லோரையும் சமமாய் அரவணைத்து செல்லும் சித்தாந்தம் யாருக்கும் எதிரானதல்ல. ஒரு மதத்தின் வாக்குகளை அண்டிப்பிழைப்பது நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து அன்பரே


பேசும் தமிழன்
டிச 18, 2025 19:40

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும்.... இண்டி கூட்டணி ஆட்கள் எப்படி அரவணைத்து சென்றார்கள் என்பது தான் தெரியுமே..... அட போங்க சார் !!!


பேசும் தமிழன்
டிச 18, 2025 09:04

பப்பு வேகாது.... எதற்கும் உதவாத ஆள் என்று கான் கிராஸ் கட்சி ஆட்களே பேச ஆரம்பித்தால்.....கைப்புள்ள க்கு கோபம் வரத்தானே செய்யும் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை