உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மீண்டும் பிரசாரம் துவக்குகிறார் விஜய்: கேட்ட தேதியில் அனுமதி மறுப்பு

 மீண்டும் பிரசாரம் துவக்குகிறார் விஜய்: கேட்ட தேதியில் அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பின், டிசம்பர் மாதத்தில் தன் பிரசாரத்தை சேலத்தில் துவங்க, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க., தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை ஒட்டி, மக்கள் சந்திப்பு பிரசாரத்தை செப்டம்பர் மாதம் திருச்சியில் துவங்கினார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டது. திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார். நாமக்கல் மற்றும் கரூரில் செப்டம்பர் 24ல் விஜய் பிரசாரம் செய்தார். கரூரில் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, தன் பிரசாரத்தை விஜய் தள்ளிவைத்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிரசாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் பணியை தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்காக, வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு, கட்சிகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாத அவகாசம் இருப்பதால், பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டிய நெருக்கடி விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிசம்பர் முதல் தன் பிரசாரத்தை மீண்டும் துவங்கவுள்ளார். இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், டிசம்பர் மாதம் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். சேலத்தில் டிசம்பர் 4ம் தேதி பிரசாரத்திற்கு அனுமதி கேட்ட நிலையில், திருக்கார்த்திகை, பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை காரணம் காட்டி, போலீசார் அனுமதி வழங்கவில்லை. இது குறித்த தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று தேதிகளை அவர் குறித்து கொடுத்துள்ளார். அந்த தேதியில் அனுமதி பெறும் முயற்சிகளை, த.வெ.க., நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். காலியான மைதானத்தில் மேடை அமைத்து பிரசாரம் செய்யலாமா அல்லது அங்கு பஸ்சை நிறுத்தி பேசலாமா என, விஜய் ஆலோசித்து வருகிறார். இம்முறை விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில், த.வெ.க., தொண்டர் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, 1,000 தொண்டர்களுக்கு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை