உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

வி.ஐ.பி., தொகுதியாக மாறும் விருத்தாசலம்: விஜயகாந்துக்கு பிறகு விஜய் போட்டி?

விருத்தாசலம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த விருத்தாசலம் தொகுதியில், நடிகர் விஜய் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், அதிக கிராமங்களை கொண்டது விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. பா.ம.க., கோட்டையாக இருந்த இத்தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில் களமிறங்கிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அடுத்து நடந்த தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி பெற்றார். இது அக்கட்சிக்கு தொகுதியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. இதனால், பா.ம.க., கோட்டையில் ஓட்டை விழுந்தது' என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு, அ.தி.மு.க., எதிர்ப்பு போன்ற காரணங்களால் தே.மு.தி.க., அத்தொகுதியில் பின்னடைவை சந்தித்தது. அதற்கடுத்து அவரது மரணம், நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு ஓட்டம் என, தே.மு.தி.க., செல்வாக்கை மீண்டும் அங்கு பெற முடியவில்லை. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய நடிகர் விஜய், இரண்டாவது மாநில மாநாட்டில் 'கேப்டன் விஜயகாந்த்' எனது அண்ணன் என குறிப்பிட்டு பேசினார். இதனை, விஜயகாந்த் மனைவியும், தே.மு.தி.க., பொதுச் செயலாளருமான பிரேமலதா விமர்சனம் செய்தார். இந்நிலையில், விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த, விருத்தாசலம் தொகுதி, விஜய்க்கும் வெற்றி வாய்ப்பை தரும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அதுபோல், அவரது குடும்ப ஜோதிடர் ஒருவர், 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கணித்து கூறியுள்ளார். 'வி' என்றால் 'விக்டரி', வெற்றி என அர்த்தம். விஜய் என்ற பெயரின் முதல் எழுத்து 'வி' என்பதால், அதே எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிடுவது சிறந்தது என கூறப்படுகிறது. இதனால், விஜயகாந்தை அண்ணன் என கூறும் த.வெ.க., தலைவர் விஜய், விருத்தாசலம் தொகுதியை 'குறி' வைப்பதாகவே கூறப்படுகிறது. இதற்காக தொகுதியின் பலம், பலவீனம் மற்றும் மக்களின் வருவாய் ஆதாரம், எதிர்ப்பார்ப்பு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க.,வின் கட்டமைப்பு குறித்த விவரங்களை த.வெ.க., வினர் சேகரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில், விருத்தாசலத்தில் விஜய் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக பேசப்படுகிறது. நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து, நடிகர் விஜயும் களமிறங்க தயாராகி வருவதால், விருத்தாசலம் தொகுதி வி.ஐ.பி., அந்தஸ்து பெரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரி விக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
அக் 22, 2025 06:59

நாட்டிற்காக நமது எல்லையில் இரவுபகலாக, பனி, மழை, கடும் மழை காலத்தில் பணியாற்றும் ராணுவவீரர்களை வி.ஐ.பி.க்கள் என்று அழைத்தால் அது மிக பொருத்தமாக இருக்கும். இதுபோன்ற சினிமாக்கார பசங்கள வி.ஐ.பி.க்கள் என்று அழைப்பதை நாம் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.


Ramesh Sargam
அக் 22, 2025 00:20

நாட்டிற்காக நமது எல்லையில் இரவுபகலாக, பனி, மழை, கடும் மழை காலத்தில் பணியாற்றும் ராணுவவீரர்களை வி.ஐ.பி.க்கள் என்று அழைத்தால் அது மிக பொருத்தமாக இருக்கும். இதுபோன்ற சினிமாக்கார பசங்கள வி.ஐ.பி.க்கள் என்று அழைப்பதை நாம் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.


Kamal
அக் 21, 2025 21:16

Thalapathy 41 pothuma


kamal
அக் 21, 2025 21:14

oru aalunu


SIVA
அக் 21, 2025 12:47

யாரு சொன்னது இவர் ஜோசியம் பார்க்க மாட்டார் என்று இவர் கட்சி பெயரை மாநாடு போன்று நடத்தி அறிவிக்காமல் ஒரு அறிக்கை போன்று பெயரை அறிவித்தார்


Oviya Vijay
அக் 21, 2025 11:07

இது ஒரு கற்பனையான பதிவு... விருத்தாசலத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் ஒன்றும் விஜய்க்கு இல்லை... மேலும் ஜோதிடம் பார்த்து தன் முடிவுகளை எடுக்கக் கூடிய நபரும் அல்ல...


angbu ganesh
அக் 21, 2025 15:31

யாரு சொன்னா இத்தனமணிக்கு போனதான் 41 பலி வாங்கமுடியும்னு ஜோசியர் சொல்லித்தான் போய் இருப்பார் முட்டு ரொம்ப வீக்


Abdul Rahim
அக் 21, 2025 10:32

விஜயகாந்த் என்ற மாமனிதருக்கு இணையாக யாரும் வர முடியாது...


s.sarangapani
அக் 21, 2025 14:27

super


பிரேம்ஜி
அக் 21, 2025 10:13

ஜோசியத்துக்காக இவ்வளவு சிரமப்பட்டு தொகுதி தேட வேண்டாம்! எந்த தொகுதியில் நின்றாலும் தொகுதி பேர் 'வி' யில் தொடங்கும்படி மாற்றினால் போயிற்று! தமிழ் நாட்டில் சிலை வைப்பது, ஊருக்கு பெயர் மாற்றுவது தினசரி கடமையில் ஒன்று!


முருகன்
அக் 21, 2025 10:08

கடந்த 25 நாட்களாக தலை மறைவு கழகமாக இருக்கும் இவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் அதன் நிலைமை எப்படி இருக்கும் யோசித்து ஓட்டு போட வேண்டும் மக்களே அரசியலில் விஜயகாந்த் மாதிரி கனவில் கூட இவரால் செயல் பட முடியாது என்பதே உண்மையாகும்


Haja Kuthubdeen
அக் 21, 2025 12:19

அவர்கள் ஒன்றும் தானாக தலைமறைவாக வில்லை...ஆக்கப்பட்டுள்ளார்கள் சில தீய சக்திகளால்...இன்னும் ஆறே மாதங்கள்.Wait and see


முருகன்
அக் 21, 2025 12:38

கூட்டம் கூடுவது ஓட்டாக மாறாது உன் தலைவன் செய்த மக்கள் பணி என்ன


Haja Kuthubdeen
அக் 21, 2025 17:29

புரட்சிதலைவர் கட்சி தொடங்கிய போதும் உங்க கூடம் இதைத்தான் சொல்லியது...


பாலாஜி
அக் 21, 2025 08:28

ஒளிந்துகொண்டு அறிவிப்புகளை வெளியிடும் ஜோசப் விஜய் விஐபி இல்லை என நிரூபித்துள்ளார்.


Oviya Vijay
அக் 21, 2025 10:58

கெடுவான் கேடு நினைப்பான்... பழமொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்... இன்னொருவரை இழிவு படுத்த எண்ணினால் நீங்கள் தான் இழிவு பட்டுப் போவீர்கள்...


Oviya Vijay
அக் 21, 2025 11:17

வாழ்த்துக்கள்...


Haja Kuthubdeen
அக் 21, 2025 12:23

அந்த ஜோசப் விஜயை கண்டுதான் சிலர் அலறுராங்க..