உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம்: தி.மு.க., கூட்டணி கட்சிகள்

அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம்: தி.மு.க., கூட்டணி கட்சிகள்

சென்னை : 'அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு, அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம்' என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.தி.மு.க., துணை பொதுசெயலர் துரைமுருகன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு தமிழகம். இங்குள்ள பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஹிந்து மத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற வழிபாட்டு தலங்களிலும், மத வேறுபாடின்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.இத்தகைய தமிழகத்தில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேட, சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றன. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக, இத்தகைய பிளவுவாத அரசியலை செய்து வருகின்றனர்; அடுத்த குறி தமிழகமாக இருக்கிறது.பா.ஜ.,வின் தேர்தல் அறுவடைக்காக, தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப் பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.திருப்பரங்குன்றம் மலை ஒரு பகுதியில், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. தர்காவில் அவ்வப்போது, ஆடு, கோழி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. முஸ்லிம் மட்டுமின்றி ஹிந்துக்களும் தர்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டதாக பொய் செய்திகளை பரப்பி பிப்., 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன.அங்கு கூடிய மத அமைப்புகள், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், வெறியூட்டும் விதத்திலும் பேசி, தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதை புறக்கணித்து பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்தி பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுகள்.மதுரை எப்போதும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு, அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

nagendhiran
பிப் 10, 2025 23:51

இந்துக்கள் விழிக்கும் போது? மதசார்பின்மை பேசுவானுங்க?


Ramesh Sargam
பிப் 10, 2025 21:29

அன்னை வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற மற்ற வழிபாட்டு ஸ்தலங்களில் ஹிந்துக்கள் என்றைக்கும் அனாவசியமாக நுழைந்து கிடா வெட்டி ரகளை செய்தது கிடையாது. செய்யவும் மாட்டோம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.


pat3.krr
பிப் 10, 2025 20:20

மத வெறி பிடிச்ச பூரா மத வெறி பிடிச்ச Sdpi மற்றும் மனித நேய மக்கள் கட்சி ல இருக்கானுங்க


chinnamanibalan
பிப் 10, 2025 19:29

சிலர் இந்து கோவில்களில் உயிர்ப் பலி கொடுப்பதாக எழுதுகின்றனர். ஆனால் ஆகம விதிப்படி அமைந்துள்ள எந்த ஒரு இந்து கோவிலிலும் உயிர்ப் பலி கொடுப்பதில்லை. குறிப்பாக தமிழ்க் கடவுள் முருகன் எழுந்தருளும் எந்த ஒரு கோவிலிலும் உயிர்ப் பலி என்பது இல்லவே இல்லை. மேலும் ஒரு சில கிராம கோவில்களில் உயிர்ப் பலி இருப்பது கூட சட்டத்துக்கு எதிரான குற்றச் செயலே. எனவே ஒரு சில கோவில்களில் பலி கொடுப்பதாக கூறி அதனை எவரும் நியாயப்படுத்த முடியாது.


ManiK
பிப் 10, 2025 18:34

பதவி பேய் திமுக மற்றும் அடிமை கட்சிகளை ஆட்டிப்படைக்கிறது. கூழுக்கும் ஆசை டோப்பா மீசைக்கும் ஆசை. தான் தப்பு பண்ணிட்டு ஏதோ பொதுமக்கள் தப்பு செய்தது போல பேசுது பார்...அது தான் திமுக வின் நயவஞ்சகம்.


பேசும் தமிழன்
பிப் 10, 2025 18:27

இவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் மலையை காத்த லட்சணத்தை தான் மக்கள் அனைவருக்கும் பார்த்தார்களே !!!


Smbs
பிப் 10, 2025 18:26

உங்கள் சாயம் வெளுத்து விட்டது இனி செல்லுபடியாகாது


பேசும் தமிழன்
பிப் 10, 2025 18:25

இங்கே அறிக்கை கொடுத்தவர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் ஆட்கள்.... இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களின் வழிப்பாட்டு உரிமையை காப்போம் என்பது தான் அவர்கள் சொல்ல வந்தது.


எஸ் எஸ்
பிப் 10, 2025 15:20

ஒரு வாசகர் பாவம் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதிக் கொண்டு இருக்கிறார்


Haja Kuthubdeen
பிப் 10, 2025 16:11

அடிப்படையில் நான் புரட்சிதலைவர் மேல் பேரண்பு..அடுத்தது அம்மா..இன்று எடப்பாடியார்...என்றும் நியாயம் பக்கம்...சிலர் நினைப்பது போல முஸ்லிம்கள் அனைவரும் ஒரே பக்கம் சாயும் மந்தைகள் அல்ல.முஸ்லிம் விரோத கருத்துக்களுக்கு பதிலுரைக்கிறேன்.


ஆரூர் ரங்
பிப் 10, 2025 14:13

ஆலயங்களில் ஆடு கோழி பலியிடும் கொடிய வழக்கத்தை எதிர்த்து நிறுத்திய அஹிம்சாவாதி வள்ளலாருக்கு மண்டபம். மறுபுறம் பாரதநாட்டைக் கொள்ளைடிக்கவே இங்கு வந்த வந்தேறி சிக்கந்தரின் சமாதிக்கு ஸ்ரீ முருகப் பெருமானின் மலையில் ஆடு அறுத்து பிரியாணிவிருந்து கொடுக்க முயற்சி. . இரண்டுக்கும் இந்தக் கூட்டணிகள் சப்போர்ட். இதெல்லாம் ஒரு பிழைப்பா?.


Haja Kuthubdeen
பிப் 10, 2025 14:47

சரிய்யா..எத்தனையோ கிராம கோவில்களில் பூசாரிகள் கிடா வெட்டி பலி கொடுக்கிறார்களே..இதுக்கு வாய மூடிக்கிறே...அப்புறம் காளியாத்தா..துர்க்கையம்மன் இவர்களும் பலராலும் வணங்கப்படும் ஹிந்து கடவுன்கள்தானே...இல்லை அவங்கள்ளாம் முஸ்லிம் என்று சங்கிகள் பிதற்ற போகிறீர்களா??இப்பவும் மேற்குவங்கத்தில் துர்க்கை அம்மனுக்கு பலி இடுகிறார்கள்.இதற்கெல்லாம் சங்கிகளிடம் பதில் உண்டா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை