உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

புதுச்சேரி : முன் விரோதம் காரணமாக தட்டு வண்டி தொழிலாளியைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தேங்காய்த்திட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (45). தட்டுவண்டி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (27). கடந்த சில நாட்களுக்கு முன் சக்தி குடித்து விட்டு சுகுமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சக்தி தனது உறவினர் ஏழுமலையுடன் சேர்ந்து சுகுமாரை கல்லால் அடித்து மிரட்டியுள்ளார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சக்தியை கைது செய்தனர். ஏழுமலையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி