உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகைப்பட கண்காட்சி துவக்கம்

புகைப்பட கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி ப்ரிட்ஜ் அகாடமி நிறுவனத்தில் புகைப்பட கண்காட்சியை திரைப் பட இயக்குனர் சுப்ரமணியசிவா திறந்து வைத்தார். புதுச்சேரி பாரதி வீதி ப்ரிட்ஜ் அகாடமியில் எடிட்டிங், வீடியோகிராபி, போட்டோகிராபி, குறும்படம் தயாரிப்பு உள்ளிட்ட திரைப்பட துறை சம்பந்தமாக தினசரி மற்றும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு புகைப்பட துறையில் பயிலும் மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், நிறுவன வளாகத்தில் நேற்று முதல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை திரைப்பட இயக்குனர் சுப்ரமணியசிவா திறந்து வைத்தார். ப்ரிட்ஜ் அகாடமி தாளாளர் மனோகர், சபரி வித்யாஸ்ரம் பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ப்ரிட்ஜ் அகாடமி மாணவர்கள் எழுதிய திரைப்பட பாடல்களை வெளியிட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை