உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் மீது தாக்கு

வாலிபர் மீது தாக்கு

புதுச்சேரி: மொபைல் போன் வாங்கி கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவரை போலீசார் தேடிவருகின்றனர். தருமாபுரியை சேர்ந்தவர் அருண் (எ) குட்டியான், 27; இவர், அதே பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். இருவரும் நண்பர்கள். அருண், கோபி என்பவருக்கு மொபைல் போனை மாத தவணை வாங்கி கொடுத்தார். மொபைல் போனுக்கு சரியாக பணம் கட்டததால் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, கலைவாணன் மற்றும் சிலர் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு அருணை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த, அவர், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், மேட்டுபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, கலைவாணன் உட்பட சிலரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ