உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை

அரியாங்குப்பம், : சுண்ணாம்பு ஆற்றில் மிதந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், இறந்தவர் தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் குபேரன் நகரை சேர்ந்த அன்பு (எ) அன்பழகன், 33; என தெரியவந்தது. இவர், மது குடிக்கும் பழக்கம் இருந்ததும், ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை