உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி : கருவடிக்குப்பம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுச்சேரி கருவடிக்குப்பம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுதேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், மாணவி ரமாபிரபா 547 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மகாலட்சுமி 545 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், தனலட்சுமி 534 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி தாளாளர் கணேசன், பள்ளி இயக்குனர் நடனசபாபதி, நிர்வாக அதிகாரி ஸ்ரீராமலு, பள்ளி துணை முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை