உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெறி நாய் கடித்து 14 பேர் காயம்: திருக்கோவிலுாரில் பரபரப்பு

வெறி நாய் கடித்து 14 பேர் காயம்: திருக்கோவிலுாரில் பரபரப்பு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை வெறிநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருக்கோவிலூர், கீழையூரில் நேற்று மதியம் 1:00 மணியளவில் சிலரை வெறிநாய் கடித்துள்ளது. அங்கிருந்து விரட்டியடித்த நாய்கள், பஸ் நிலையத்தில் புகுந்து பயணிகளை கடித்து குதறியுள்ளது. பின்னர், யூனியன் ஆபீஸ் ரோடு, வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையில் சென்றவர்களை அடுத்தடுத்து அந்த நாய் கடித்தது.இதுகுறித்து போலீசாரும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வெறி நாயை துரத்தி சென்று நாயை பிடித்து சென்றனர். நாய் கடித்ததில் திருக்கோவிலுாரை சேர்ந்த வெங்கடேசன் மகன் தனுஷ்நாதன், 15; விளந்தையை சேர்ந்த ராஜகோபால், 72; எல்லை கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி, 50; நெடுமுடையானை சேர்ந்த 36; கூடலூரை சேர்ந்த சின்னதுரை மகள் பிரீத்தி, 15; உள்ளிட்ட 14 பேர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை