உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் 1.75 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் 1.75 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி: பொது இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், உழவர்கரை நகராட்சி சார்பில், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உழவர்கரை நகராட்சி சுகாதார பணியாளர்கள் 90 பேர் மற்றும் சாரதா கங்காதரன் கல்லுாரி, இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், 50 பேர் இணைந்து லாஸ்பேட்டை, ெஹலிபேடு மைதானத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றினர். நிகழ்ச்சியை, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் துவக்கி வைத்தார்.நிகழ்வில், புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ்குமார், சாரதா கங்காதரன் கல்லுாரி மற்றும் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், நகராட்சி சுகாதார அதிகாரி ஜெய்சங்கர் மற்றும் இளநிலை பொறியாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ெஹலிபேடு மைதானத்தில் இருந்து 1.75 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை