| ADDED : ஆக 20, 2024 05:03 AM
பாகூர்: பாகூர் மற்றும் திருக்கனுாரில் நடந்த விபத்துகளில் மின்சாரம் தாக்கி, பள்ளி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.பாகூர் அடுத்துள்ள குடியிருப்பு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன், 50; புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் டிரைவாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மணிஷ்வரன், 22; முருங்கப்பாக்கத்தில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.மணிஷ்வரன் நேற்று முன்தினம் குடியிருப்பு பாளையத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ளமாடி வீட்டில் ஏறி நின்றிருந்தபோது அருகே சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கிபடுகாயமடைந்தார். பாகூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் உயிரிழந்தார்.பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் பலி
திருக்கனுார் அருகே காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா; ஸ்டுடியோ வைத்துள்ளார்.இவரது மகன் சித்தார்த், 10; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சித்தார்த், வீட்டு மொட்டை மாடியில் விளையாடியபோது, வீட்டு அருகே சென்ற மின்கம்பியில் மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டார்.திருக்கனுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டவர் நேற்று இறந்தார். காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.