உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்

வானுார் : கிளியனுார் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நல்லாவூர் சுடுகாடு மற்றும் கொந்தாமூவர் அருகே சந்தேகிக்கும் வகையில் பைக்குகளுடன் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்ததில் இருவரிடமும் தலா 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.விசாரணையில் நல்லாவூர் வெங்கடேஷ் மகன் அஜய், 23; கொந்தாமூர் மாரியம்மன் கோவில் வீதி கெங்காபால் மகன் கதிரவன்,23; என்பதும் இருவரும் சென்னையில் இருந்து கஞ்சா வங்கி வந்து விற்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 2,200 கிராம் கஞ்சா மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை