உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: தற்காலிக பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ் பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையம் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து, சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.விசாரணையில், இருவரும், விழுப்புரம் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராகதேவன், 18; பிரகாஷ், 19; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ