உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி : கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். எல்லைபிள்ளைச்சாவடி தனியார் ஒட்டல் எதிரில் 2 வாலிபர்கள் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர்.அவர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் புதுச்சேரி குண்டுசாலை சேர்ந்த அன்பரசன், 21, வில்லியனுார் கானுவப்பேட்டை ரியாஸ் அகமது என, தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்