உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை சிவில் சர்வீசஸ் தேர்வு  புதுச்சேரியில் 2,578 பேர் பங்கேற்பு

நாளை சிவில் சர்வீசஸ் தேர்வு  புதுச்சேரியில் 2,578 பேர் பங்கேற்பு

புதுச்சேரி: சிவில் சர்வீசஸ் தேர்வுபுதுச்சேரியில் நாளை ஏழு மையங்களில் நடக்கிறது. 2,578 பேர் எழுதுகின்றனர்.புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு நாளை 16ம் தேதி காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையில் இரு வேளைகளில் நடக்கிறது. புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, கம்பன் மற்றும் சுந்தரம் பிளாக், அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, வள்ளலார் அரசு பெண்கள் பள்ளி, உப்பளம் நேதாஜி நகர் இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்தளம் மற்றும் இரண்டாம் தளம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி லட்சுமி ஹால் மற்றும் சரஸ்வதி மகால் உள்ளிட்ட ஏழு மையங்களில் நடக்கிறது.மொத்தம் 2,578 பேர், தேர்வு எழுத உள்ளனர். லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி லட்சுமி ஹால் மற்றும் சரஸ்வதி மகாலில் மாற்றுத்திறனாளி தேர்வர் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு தேர்வு எழுத உள்ளவர்களின் வசதிக்காக 16ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:15 மணி வரையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த பின் அனைத்து தேர்வு மையங்களில் இருந்து திரும்பி செல்லுவதற்கும் மாலை 4:30 மணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.தேர்வு துவங்குவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 9:00 மணிக்கும், மதியம் 2:00 மணிக்கும் தேர்வு மையத்தின் நுழைவு வாயில்கள் மூடப்படும். இ-அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தை தவிர வேறு மையத்தில் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட ஒவ்வொரு அமர்விலும் இ-அட்மிட் கார்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண் உள்ள புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.மாற்றுத்திறனாளி தேர்வர்கள் ஒவ்வொரு தரை தளத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பார்வையற்ற தேர்வர்கள், பெரிய எழுத்துருவில் வினாத்தாள் கோரினால் அவருக்கு சாதாரண எழுத்துரு வினாத்தாளுக்கு பதிலாக வழங்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை