மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி, தமிழக பகுதிகளில் மொபைல் போன்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் விடுதிக்குள் கடந்த 13ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து இரண்டு மொபைல் போன்களை திருடி சென்றனர். இதுகுறித்து, புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், கிரைம் போலீசார் குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.நேற்று காலை, காந்தி வீதியில் சிலர் நின்று கொண்டு பழைய மொபைல் போன்களை விற்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து. மொபைல் போன்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் காந்தி வீதி விடுதியில் திருடிய மொபைல் போன்கள் என போலீசார் கண்டுப்பிடித்தனர்.அவர்கள், சென்னை பழனியம்மாள் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன்,36; எம்.கே.பி., நகர் மதன்குமார்,35; கள்ளக்குறிச்சி காந்தி சாலையை சேர்ந்தை வீரா,28; ஆகியோர் என்பதும், தமிழக பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய மொபைல் போன்கள் இருந்தது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து, புதுச்சேரி, தமிழக பகுதியில் திருடிய 10.5 லட்சம் மதிப்புள்ள 21 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago