உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நண்பனின் கொலைக்கு பழி தீர்க்க வீச்சரிவாளுடன் காத்திருந்த 6 பேர் கைது

நண்பனின் கொலைக்கு பழி தீர்க்க வீச்சரிவாளுடன் காத்திருந்த 6 பேர் கைது

புதுச்சேரி : நண்பன் கொலைக்கு பழி தீர்க்க வீச்சரிவாளுடன் காத்திருந்த 6 பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, கப்பித்தான் மரிய ஜேவியர் வீதியில் இருட்டான பகுதியில் சந்தேகத்திடமாக வீச்சு அரிவாளுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தப்பியோட முயன்ற 6 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.புதுச்சேரி, கோவிந்தசாலையைச் சேர்ந்த ரவுடி பரத், 29. கடந்த நவ., 2ம் தேதி, மாஸ் ஓட்டல் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதான 8 பேரும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.அவர்களை கொலை செய்ய, பரத்தின் நண்பர்களான அரியாங்குப்பம் பாரதி நகர், நெய்தல் வீதியைச் சேர்ந்த விஜி (எ) ஆடு விஜி, 35; கோவிந்தசாலை, ராஜிவ்காந்தி குடியிருப்பு, அந்தோணியர் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வம் (எ) சக்திவேல், 44; முருங்கப்பாக்கம், குயவர் வீதியைச் சேர்ந்த தணிகைவேல், 28; நாட்டார் வீதி சக்திவேல், 30; நைனார்மண்டபம், பாண்டியன் வீதி ஜான் (எ) எர்னஸ்ட் ராஜ், 31; புதுச்சேரி இளங்கோ நகர், தமிழ்மகள் வீதியைச் சேர்ந்த பிரகாஷ், 38; ஆகியோர் காத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் 6 பேரையும் கைது செய்து, 6 வீச்சரிவாள், 4 மொபைல் போன்கள், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைதான பிரகாஷ் கொலை செய்யப்பட்ட பரத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எஸ்.பி., பாராட்டு

நடக்க இருந்த கொலை சம்பவத்தை தடுத்து 6 பேரை கைது செய்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கிழக்கு கிரைம் போலீஸ் குழுவை, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ