மேலும் செய்திகள்
புதிய அரசு பதவியேற்பு விழா சட்டசபை அறைகள் புதுப்பிப்பு
13 hour(s) ago
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
17 hour(s) ago
திருக்கனுார்: புதுச்சேரி, முத்தரையார் பாளையம் இளங்கோ அடிகள் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 55; கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய கதிர்வேல், அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது தாய் வீடான செல்லிப்பட்டு வந்து தங்குவது வழக்கம்.கடந்த சில தினங்களுக்கு முன் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கதிர்வேல் செல்லிப்பட்டு பெரிய தோப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். நேற்று காலை 5:00 மணி அளவில் கதிர்வேல் செல்லிப்பட்டு புதிய காலனி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குடிபோதையில் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 hour(s) ago
17 hour(s) ago