உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடியில் இருந்து விழுந்த மனநலம் பாதித்தவர் சாவு

மாடியில் இருந்து விழுந்த மனநலம் பாதித்தவர் சாவு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் மனநல காப்பகத்தின் மாடியில் இருந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அரியாங்குப்பம், மணவெளியில் தனியார் மனநல காப்பகம் உள்ளது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த விஜயபிரியகுமார், 47, தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் மதியம் காப்பகத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து அவர் தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, காப்பகத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை