உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் கிராமம் செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் தேவை

போலீஸ் கிராமம் செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் தேவை

திருக்கனுார்: போலீஸ் கிராமமாக மாறி வரும் செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் அமைத்து தர இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி, செட்டிப்பட்டு கிராமத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் என 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால், செட்டிப்பட்டு கிராமத்தை போலீஸ் கிராமம் என அழைத்து வருகின்றனர்.கடந்த 2022ம் ஆண்டு நடந்த போலீஸ் பணிக்கான தேர்வில் கிராமத்தைச் சேர்ந்த 35 பேர் பங்கேற்று, ஒரு பெண் உட்பட 8 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு (2023) ஆண்டு நடந்த போலீஸ் பணிக்கான தேர்வில் 32 பேர் பங்கேற்று, இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் தேர்ச்சி பெற்றனர். சமீபத்தில் நடந்த ஊர்காவல் படைவீரர்கள் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று, செட்டிப்பட்டு கிராமம் போலீஸ் கிராமம் என்ற பெயரை தக்கவைத்துள்ளது.இக்கிராமத்தில் போதிய விளையாட்டு மைதான வசதி இல்லாததால், இளைஞர்கள் அருகிலுள்ள தமிழகப் பகுதிகளுக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இக்கிராம இளைஞர்கள் கூறுகையில், 'கிராமத்தில் முன்பு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளவர்கள் தங்களை ஊக்கப்படுத்தி வருவதால், தங்களும் போலீஸ் பணிக்கு செல்ல வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எங்களது கிராமத்தில் உடற்தகுதியை வளர்த்துக் கொள்ளும் வகையில் போதிய விளையாட்டு மைதானம் இல்லை. இதன் காரணமாக அருகில் உள்ள தமிழக பகுதியான திருவக்கரை, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, தாங்களே சிறிய மைதானம் ஏற்படுத்தி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், பெண்களும் பயிற்சி பெறுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி