மேலும் செய்திகள்
போலீஸ் உடல் தகுதி தேர்வு முதல் நாள் 279 பேர் பங்கேற்பு
20 hour(s) ago
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
20 hour(s) ago | 1
போதையில் தகராறு: 2 பேர் கைது
20 hour(s) ago
புதுச்சேரி : கோரிமேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.செவிலியர் வனிதா வரவேற்றார். செவிலியர் அதிகாரிகள் சாந்தி, நிர்மலா, பானு முன்னிலை வகித்தனர். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். அவர், காசநோயின் வகைகள், நுரையீரல் காசநோயின் முதன்மை அறிகுறிகள், அதை கண்டறிந்து குணப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார்.காசநோய் பொறுப்பு கிராமப்புற செவிலியர் வெண்ணிலா, 'காச நோயை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும்' எனும் தலைப்பில் பேசினார். சுகாதார உதவியாளர் ஜெகநாதன், காசநோயை கட்டுப்படுத்துவதில் நம்முடைய பங்கு என்ன என்பது பற்றி விளக்கினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார உதவியாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஷா ஊழியர்கள் வெற்றிச்செல்வி, விருதாம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago | 1
20 hour(s) ago