மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
பாகூர்: பாகூர் மற்றும் வில்லியனுார் தாலுகாவில் நடைபெற உள்ள சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாமில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு, சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.இது குறித்து வில்லியனுார் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 13ம் தேதி வில்லியனுார் குறுவட்டம் கோட்டைமேடு விவேகானந்தர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 15ம் தேதி அரும்பார்த்தபுரம் திரு.வி.கா. அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 17ம் தேதி தொண்டமாநத்தம் குறுவட்டம் கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18ம் தேதி கொடத்துார் குறுவட்டம் காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.இதேபோல், பாகூர் தாலுகா நெட்டப்பாக்கம் குறுவட்டம் கம்பன் அரச மேல்நிலைப்பள்ளியில் 13ம் தேதியும், மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15ம் தேதியும், ஏம்பலம் மறைமலை அடிகள் மேல்நிலைப்பள்ளியில் 17ம் தேதியும், கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 18ம் தேதியும் சிறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் நடக்கிறது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago