உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் மீது விழுந்த மரக்கிளை

பஸ் மீது விழுந்த மரக்கிளை

அரியாங்குப்பம் : வீராம்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை 7:30 மணிக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அரியாங்குப்பம் சாலை வழியாக வந்த போது, சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கிளை திடீரென முறிந்து பஸ் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சென்ற மின் ஒயர்கள் அறுந்து விழுந்தது. இது பற்றி, புதுச்சேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, பஸ் மீது விழுந்த கிடந்த மரக்கிளை, மின் ஒயர்களை அப்புறப்படுத்தினர். மரக்கிளை பஸ் மீது விழுந்ததால், பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பித்தனர். இந்த மீட்பு பணியால் அந்த பகுதியில் ஓரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி