உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி: ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை என கூறி பெண்ணிடம் 2.33 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி, 39; இவரை மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு , ஆன் லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பிய அந்த பெண் 2.33 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். மேலும், அவர் ஆன் லைன் மூலம் வேலை செய்ததற்கான பணத்தையும் அவரால் எடுக்க முடியாமல் முடக்கப்பட்டது. இதற்கு பின் அந்த மர்ம நபரின் மொபைல் போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த பெண் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை