உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு 

பணி நிறைவு பாராட்டு 

புதுச்சேரி: வ.உ.சி., மேல்நிலைப் பள்ளியில் அலுவலக கண்காணிப்பாளர் மேகநாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி, மூத்த விரிவுரையாளர் சீனிவாசன் தலைமை தாங்கினர்.பணி ஓய்வு பெற்ற மேகநாதனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது. விரிவுரையாளர்கள் ராஜ் மோகன், கிரிஜா, எட்வர்டு சார்லஸ் வாழ்த்துரை வழங்கினர். கண்காணிப்பாளர் மேகநாதன் ஏற்புரை யாற்றினார்.விரிவுரையாளர் சகுந்தலா தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் சுகந்தி நன்றி கூறினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை