உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை

ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை

புதுச்சேரி : பெரியக்கடை போலீசார் மோப்பநாயுடன் ஆம்பூர் சாலையில் உள்ள கடைகளில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க, டி.ஜி.பி., சீனிவாஸ் உத்தரவின் பேரில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக, பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆம்பூர் சாலையில் உள்ள கடைகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மோப்பநாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, வெங்கடா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதிகளில் பரப்பரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை