உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகராட்சி துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை

நகராட்சி துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை

காரைக்கால்: காரைக்கால் நகராட்சியில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவின் பேரில் ,காரைக்கால் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சிறப்பு துப்புரவு பணி நேற்று முன்தினம் துவங்கி வரும் ஜூன் 6ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காரைக்கால் லெமர் வீதி, காமராஜர் சாலை விரிவாக்கம், பாரதியார் சாலை மற்றும் பிற பகுதிகளில் துப்புரவு பணி நடந்தது. பணியை காரைக்கால் நகராட்சி ஆணையர் துவக்கிவைத்தார். மேலும் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மேலும் பொதுமக்கள் 9159232916 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணிகளை செய்ய (குப்பை அகற்றுதல், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி) தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை