உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., வேட்பாளரின் மனைவி வியாபாரிகளிடம் ஓட்டு சேகரிப்பு

அ.தி.மு.க., வேட்பாளரின் மனைவி வியாபாரிகளிடம் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவரது மனைவி வியாபாரிகளிடம் ஓட்டு சேகரித்தார்.புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகனுடன், தமிழ்வேந்தன் புதுச்சேரி முழுதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.இந்நிலையில் வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக அவரது மனைவி நிவேதிதா தனது கணவர் முகமூடியை அணிந்த கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.புதுச்சேரி பழைய பஸ் நிலையம் உழவர் சந்தையில் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள், முதியோர்களிடம் ஓட்டு சேகரித்தார்.தொடர்ந்து, அண்ணா சாலை வழியாக நேரு வீதி வரை கடைகளுக்கு நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு சேகரித்தார். நிவேதிதாவுடன் பங்கேற்ற இளைஞர்கள் வேட்பாளர் தமிழ்வேந்தன் முகமூடி அணிந்து ஓட்டு சேகரித்தனர்.நிவேதிதா கூறுகையில், 'தேர்தலில் எனது கணவர் தமிழ்வேந்தனை வெற்றி பெற செய்தால், சாமானிய பெண்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவார். சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார். புதுச்சேரியில் பா.ஜ., - காங்., பல முறை ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் இதுவரை எதுவும் செய்யவில்லை. இனி ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பொய் கூறி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க.விற்கு ஒரு முறை வாய்ப்பு அளியுங்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை