| ADDED : ஏப் 01, 2024 06:36 AM
திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.திருக்கனுாரில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், சிறப்பு அழைப்பாளர் முத்தழகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பா.ஜ., நிர்வாகிகள் வீரராகவன், தமிழ்மணி, கலியபெருமாள், செல்வகுமார், தங்கராசு, பா.ம.க., நிர்வாகிகள் அச்சுதன், ஏழுமலை, தேவராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வரும் 7 ம் தேதி தொகுதியில் பிரசாரத்திற்கு வரும்போது சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.