உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம்.

வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம்.

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வணிக நிறுவனங்களின் பொருட்களை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி அபராதம் விதித்தனர்.புதுச்சேரி உழவர்கரை நகராட்சி உட்பட்ட காமராஜர், வள்ளலார் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள், பொருட்கள், தேவையற்ற வாகனங்கள் ஆகியவை அகற்றினார்.எச்சரிக்கை மீறி வைக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு அபராதம் விதித்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்,ஸ்டிரா போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது , மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். தெருக்களில் குப்பைகள் கொட்டாமல் குப்பை வண்டிகளில் குப்பைகளை வழங்க அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதா ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ