| ADDED : ஏப் 16, 2024 06:33 AM
புதுச்சேரி, : லோக்சபா தேர்தலையொட்டி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, தேர்தல் துறை அதிகாரிகள் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, தேர்தல் துறை சார்பில், முறையான வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், திட்டத்தின் கீழ், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், நேற்று திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலெக்டர் குலோத்துங்கன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் திருநங்கைகள் அனைவரும், தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். மேலும், மற்றவர்களையும் ஓட்டளிக்க நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர்களிடம் அறிவுறுத்தினர்.திருநங்கைகளை அழைத்தற்கு திருநங்கை ஷீலா சார்பில், கலெடருக்கு நன்றியை தெரிவித்தார்.இதில், 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, நோடல் அதிகாரி செழியன் உட்பட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.