மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
9 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
9 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
9 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
9 hour(s) ago
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் திருக்கனுார் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல், எவ்வாறு நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போக்சோ, குழந்தை தொழிலாளர் சட்டம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், திருக்கனுார் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago