மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
2 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
2 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
2 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
2 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அமைச்சக பதவிகளில் அசிஸ்டண்ட் எனப்படும் 1,135 உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதம் நேரடி நியமனமாகவும், 20 சதவீதம் துறை ரீதியாக லிமிடெடு தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 14ம் தேதி 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியானது. ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக விண்ணப்பம் பெறப்படவில்லை.இதற்கிடையில் 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு மீண்டும் நிர்வாக சீர்த்திருத்த துறை விண்ணப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. https://recruitment.py.gov.inமற்றும் https://dpar.py.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று 23ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், பொது-104, எம்.பி.சி.,-46, எஸ்.சி.,-41, ஓ.பி.சி.,-28, இ.டபுள்யூ.எஸ்.,-25, மீனவர்-5, முஸ்லீம்-5, பி.டி.,-1, எஸ்.டி.,-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago