உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை இளைஞர் மீட்பு எஸ்.பி.,க்கு பாராட்டு

போதை இளைஞர் மீட்பு எஸ்.பி.,க்கு பாராட்டு

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த செம்பியர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி மனைவி உமாபார்வதி. இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன், 22. இவர் குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டார்.நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தார். உமாபார்வதி, வில்லியனுார் மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டியிடம், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை காப்பாற்றி கொடுக்குமாறு கோரிக்கை மனு வழங்கினார்.எஸ்.பி., உத்தரவின் பேரில், மங்களம் போலீசார், பாதிக்கப்பட்ட செந்தமிழ்ச்செல்வனை மீட்டு அரியாங்குப்பம் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அரியாங்குப்பம் மறுவாழ்வு மையத்திற்கு சென்ற சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., வம்சிதரெட்டி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை சந்தித்து விரைவில் குணமடைந்து விடுவாய் என, ஆறுதல் கூறினர். இந்த தகவல் சமூக வளைதளத்தில் பரவியதை பார்த்த பொதுமக்கள் எஸ்.பி.,யை பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை