உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : முன் விரோதத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 36, டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த அஜய் 29, சதீஷ், 31; ஆகியோருடன் மணிகண்டனுக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு 10.00 மணியளவில் மணிகண்டன் அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் தாமரை குளம் அருகில் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய், சதீஷ் ஆகியோர் மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமைடைந்த மணிகண்டன் அரசு பொது மருத்துவனைமயில் சிகிச்சை பெற்றார். மணிகண்டன் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை