உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: இந்தியன் ரிசர்வ் வங்கி சென்னை கிளை சார்பில், அங்கீகரிக்கப்படாத வைப்பு நிதி சேகரிப்பு, ஆன்லைன் நிதி மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய ரிசர்வ் வங்கி யின் சென்னை கிளை துணை பொது மேலாளர் சில்பி குமாரி தலைமை தாங்கினார்.இந்திய கார்பரேட் சட்ட சேவை புதுச்சேரி பதிவாளர் கோகுல்நாத், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய துணை பொது மேலாளர் சுமதி, இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் வெங்கட சுப்ரமணியன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசார், வங்கி ஊழியர்கள், சுய உதவிக்குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில், அங்கீகரிக்கப்படாத வைப்பு நிதி சேகரிப்பு மற்றும் ஆன்லைன் நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை