உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்க்., படிப்பு  முதல் சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு 

பி.ஆர்க்., படிப்பு  முதல் சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு 

புதுச்சேரி, : பி.ஆர்க்., படிப்புக்கான முதல் சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் உள்ள பி.ஆர்க்., படிப்பு சேர்க்கைக்கான வரைவு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் விண்ணப்பதாரர்களிடம் பெறப்பட்ட ஆட்சேபனைகள் நிவர்த்தி செய்து, முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.விண்ணப்பதாரர்கள் சென்டாக் இணையதளத்தில் தங்களின் டேஸ்போர்டில் லாகின் செய்து சேர்க்கை ஆணையை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒரிஜினல் சான்றிதழ்களுடன், கல்லுாரியை அணுகி இன்று 17 ம் தேதி காலை 10:00 மணி முதல் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர்க்கை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ