உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாசிக் வாட்டர் யூனிட் சூழ்ச்சி செய்து மூடல் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

பாசிக் வாட்டர் யூனிட் சூழ்ச்சி செய்து மூடல் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

புதுச்சேரி : பாசிக் வாட்டர் பிளான்ட் சிலரின் சூழ்ச்சியால் வேலை நிறுத்தம் செய்து மூடப்பட்டது என, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறினார்.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் குறித்த விவாத்தின்போது, பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ.; காரைக்காலில் தனியார் மூலம் மட்டுமே உரம் விற்பனை நடப்பதால், உரம் வாங்கி செல்வோரிடம் கூடுதலாக ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என விவசாயிகளிடம் கட்டாயப்படுத்துகின்றனர். எனவே, பாசிக் மூலம் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுங்கள்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: பாசிக் நிறுவனத்தை தன் சொந்த நிறுவனம் போல் நினைத்து பல்வேறு முயற்சி எடுத்து நடத்தினோம். சிலரின் சூழ்ச்சியால் பாசிக் வாட்டர் பாட்டில் பிரிவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வைத்து மூடி விட்டனர்.கல்யாணசுந்தரம்: பாசிக் தண்ணீர் புதுச்சேரியின் அடையாளம். அதனை கம்யூ., கட்சியின் ஒரு தலைவரின் சுயலாபத்திற்காக மூடி விட்டனர். அரசால் பாசிக் தண்ணீர் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், பி.பி.ஏ., முறையில் என்னிடம் கொடுங்கள் நான் நடத்தி காட்டுகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி