உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உயிர் பன்மயம் மேலாண் குழு கூட்டம்

உயிர் பன்மயம் மேலாண் குழு கூட்டம்

வில்லியனுார்: வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள 42 கிராம பஞ்சாயத்துகளில் உயிர் பன்மயம் மேலாண்மை குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாகி பாகி தலைமை தாங்கினார். பெங்களூர் எப்.எல்.ஆர்.எச்.ஏ நிறுவன பிரதிநிதிகள், ஆரோவில் அரணியா பாரஸ்ட் இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயிர் பன்மயம் அமைப்பு மருத்துவர் அறிவுடைநம்பி பேசினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி உயிர் பன்மயம் நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த 10 கிராம பஞ்சாயத்துகளில் முதற்கட்டமாக உயிர் பன்மயம் அமைப்பு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை