உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை டில்லி பயணம்: 23ம் தேதி உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை டில்லி பயணம்: 23ம் தேதி உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்ததால், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை டில்லி புறப்படுகின்றனர்.ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதுள்ள அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொலப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் போர்கொடி உயர்த்தினர்.ரகசிய கூட்டம் நடத்திய கையோடு, மாநில பா.ஜ., கட்சி தலைவர் செல்வகணபதியுடன், டில்லி சென்று கட்சியின் அமைப்பு செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம்மெக்வால் சந்தித்தனர். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் திரும்பினர்.பா.ஜ., மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது சராமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.இந்நிலையில், நாளை மறுநாள் 23ம் தேதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நாளை 22ம் தேதி மாலை டில்லி புறப்பட்டு செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி