உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி : குறிஞ்சி நகர் மற்றும் ஜீவானந்தபுரம் பகுதியில், உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி தலைமையில், பூத் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் தண்டபாணி பேசும்போது, 'இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் நலத்திட்டங்களை பெற்றிருக்கின்றனர்.ஆனால், பொய்யான வாக்குறுதிகளை சொல்லிசில கட்சியினர்ஓட்டு கேட்கின்றனர்.லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், தரமான சிமென்ட் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.மோடிமீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய நாடுஅதீத வளர்ச்சியை அடையும்.புதுச்சேரியில் நமச்சிவாயம் வெற்றி பெறுவதன் மூலம் லாஸ்பேட்டை தொகுதி அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறும் எனபேசிஓட்டு சேகரித்தார்.கூட்டத்தில், பா.ஜ., மாநில மகளிர் அணி தலைவர் ஜெயந்தி, கிளை தலைவர்கள் வெண்ணிலா, மணிகண்டன், குமாரி, ஜீவானந்தபுரம் பா.ஜ., நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், பரசுராமன், பெருமாள், தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ