உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,- என்.ஆர்.காங்., கூட்டணி தோல்வி அடையும்: மா.கம்யூ., ராஜாங்கம் சொல்கிறார்

பா.ஜ.,- என்.ஆர்.காங்., கூட்டணி தோல்வி அடையும்: மா.கம்யூ., ராஜாங்கம் சொல்கிறார்

புதுச்சேரி: 'தேர்தலில் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி படுதோல்வி அடையும் என', மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் கூறினார்.அவர் கூறியதாவது; மத்தியில் 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் அநீதி, கொடுமைகளையும், புதுச்சேரியில் 3 ஆண்டுகால ஆட்சியை மக்கள் எண்ணி பார்த்து கை சின்னத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.இலவச அரிசி கொடுப்பதைமத்திய அரசு தடுக்கிறது.புதுச்சேரி மின்துறையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளனர். ரேஷன் கடைகளை மூடிவிட்டு, ரெஸ்டோ பார்களை திறந்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து தவறான தகவல் பரப்புகிறார்.தற்போது ரேஷன் கடையை திறப்போம் என பொய் கூறுகிறார். இந்த தேர்தலில் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி படுதோல்வி அடையும்.பொய் மூட்டைகளை தனது மூலதனமாக வைத்து கொண்டு மக்களை பா.ஜ., ஏமாற்றுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலும், மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவர்' எனக் கூறினார்.மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சுதா, பிரபுராஜ், கொளஞ்சியப்பன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை