மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
திருக்கனுார், : செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.செல்வ முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, நாளை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago