உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருட்டு பைக் பயன்படுத்திய சிறுவன் கைது

திருட்டு பைக் பயன்படுத்திய சிறுவன் கைது

அரியாங்குப்பம்: முதலியார்பேட்டையில் திருட்டு பைக் ஓட்டி வந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ேஷக் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக பைக்கில் வந்த 17 வயது சிறுவன் போலீசாரை கண்டதும், பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை மடக்கி விசாரித்தனர்.அவர், சாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்து, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை