உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கல் சூளை தொழிலாளி சாவு

செங்கல் சூளை தொழிலாளி சாவு

காட்டேரிக்குப்பம், : தேத்தாம்பாக்கத்தில் செங்கல் சூளை தொழிலாளி, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். விழுப்புரம், விக்கரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49; கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் காட்டேரிக்குப்பம் அடுத்த தேத்தாம்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.நேற்று காலை ராமமூர்த்திக்கு சர்க்கரை நோய் காரணமாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து ராமமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை