உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பனை மரங்கள் எரிந்து சேதம்

பனை மரங்கள் எரிந்து சேதம்

பாகூர்: கந்தன்பேட் கிராமத்தில் திடீரென பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கந்தன்பேட் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு பின் பகுதியில் வரிசையாக பனை மரங்கள் உள்ளன. நேற்று மதியம் இந்த பனை மரங்களின் கீழே இருந்த செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது.அதிலிருந்த தீ அங்கிருந்த பனை மரங்களில் மீது பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள், பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ