| ADDED : மே 06, 2024 05:51 AM
புதுச்சேரி, : புதிய பஸ் நிலையத்தில் சீரமைக்கும் பணி காரணமாக மறைமலை அடிகள் சாலையில் பஸ்கள் நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கிறது.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதனால், பஸ்கள் நிறுத்துவதற்கு போதி இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால், விழுப்புரம், கடலுார், பாகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்த முடியாமல் உள்ளது.அதனால், பஸ் நிலைத்தில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் பஸ்கள் மட்டும், பஸ் நிலையத்திற்குள் செல்கிறது. அதிக நேரம் காத்திருந்து புறப்படும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல், பஸ் நிலையம் அருகே உள்ள மறைமலை அடிகள் சாலையில் அடைத்து கொண்டு வரிசையாக நிறுத்துப்படுகிறது.பஸ் நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து முடியும்வரை, கடலுார் சாலை ஏ.எப்.டி., மைதானத்திற்கு தற்காலிகமாக பஸ் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், லோக்சபா தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த ஏற்பாடு நிறுத்தப்பட்டது.அதையடுத்து, மறைமலை அடிகள் சாலைகளில் தொடர்ந்து பஸ்களை நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கிறது.